(FASTNEWS | COLOMBO) – தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது, நாளை(08) தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 18 மாவட்டங்களில் அதிக டெங்கு அபாயமுள்ள 75 சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக குறித்த அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தைச் சேர்ந்த சிறப்பு நிபுணர் ஹசித திசேரா வேலைத்திட்டம் பற்றி விபரித்தார்.