தேசிய தின நிகழ்வுகளிற்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி…

71ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்றும்(03) ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இன்று காலை 6.30 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி மற்றும் கோட்டையிலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி தற்காலிமாக மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை(04) அதிகாலை 5 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்டம் பகுதிகளுக்கிடையிலான வீதி மூடப்படவுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளார் கூறியுள்ளார்.

குறித்த நேரத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.