தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குச் சொந்தமாகிய சீ.எஸ்.என் நிறுவனத்தின் நடமாடும் ஒளிபரப்பு வாகனம்!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தினரால் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட OD (நடமாடும் ஒளிபரப்பு வாகனமானது தற்காலிகமாக தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கடுவெல நீதவான் நீதிபதி தம்மிக ஹேமபால இன்று பிறப்பித்துள்ளார்.

93 இலட்சம் பெறுமதியான குறித்த வாகனத்துக்கான உரிமையாளர்கள் யாரும் உறுதிப்படுத்தாத நிலையில் அது உறுதிப்படுத்தும் வரை தேசிய தொலைகாட்சி நிறுவனத்துக்கு வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் கடுவெல நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமையவே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

CSN தொலைக்காட்சி நிறுவனம் மூலம் அரச சொத்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் யோசித்த ராஜபக்ஸ, தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நிசாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அசான் ரவிநாத், உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.