தேசிய நத்தார் விழா இன்று(21) மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பேரில் இந்த தேசிய விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு அமைவாக இரண்டு நினைவு முத்திரைகளும் வெளியிடப்படும். இந்த நிகழ்வில் கரோல் பக்தி கீதங்கள், புனித பைபிள் வாசகங்கள், அறிவுத் தேடல் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.