தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் புறக்கணிப்பில்…

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் இன்று(02) 4 மணிநேர புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறையை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறித்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வை பெற்று தருமாறு வலியுறுத்தியே குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

#rishma..