தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ம் திகதி நிறைவு…

தேசிய பாடசாலைகள் 302 இற்காக அதிபர் வெற்றிடங்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி நிறைவடையச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நேர்முகப் பரீட்சைகளை நிறைவடைய இருந்ததாகவும், சாதாரண தரப் பரீட்சைகளுக்கு பணியில் ஈடுபடும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.