தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும், இந்த வாரத்திற்குள் சுற்றுலா மற்றும் விமான நிறுவன அதிகாரிகளும் கோப் குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை 19 அரச நிறுவனங்களின் விசாரணை அறிக்கைகளை கோப் குழு பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.