(FASTNEWS |COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை குறைத்தல் பற்றிய சட்ட வரைவு தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.