தேசிய முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை..

நாட்டில் முச்சக்கரவண்டிகளை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது என தேசிய முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இச்சட்டத்தினை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும். இல்லையெனின் அடுத்த மாத முற்பகுதியில் போக்குவரத்து அமைச்சை முற்றுகையிடுவோம் என அச்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மருதானை சனசமூக நிலையத்தில் நேற்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

(rizmira)