தேசிய லொத்தர் சபைக்கு புதிய விற்பனை முகவர்களை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபையின் தலைவர் சாமலி பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை முகவர்கள் தமது கடைகளை மூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமைக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முகவர்கள் விற்பனைப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், நாட்டில் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட ல்லையெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
விற்பனை நடவடிக்கையைப் புறக்கணித்துள்ள விற்பனை முகவர் உள்ள பகுதிகளுக்கு லொத்தர் விற்பனைக்கு தற்பொழுது விசேட முகவர்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.