முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டு வருவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் அதெரிவிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது, தேசிய லொத்தர் சபை, வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. குறித்த இந்தச் செயற்பாட்டுக்கு, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
(rizmira)