தேசிய வைத்தியசாலையாக கண்டி வைத்தியசாலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட வைத்தியர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.