தேனை முகத்தில் பயன்படுத்தலாமா?

அழகு நிலையம் சென்று அழகு படுத்திக் கொள்ள நேரம் இல்லாதவர்கள் கூட வீட்டிலேயே எளிய முறையில் தேவதை போன்ற அழகைப் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

பால் தேன் பேஸ்பேக்:
உங்கள் சரும பிரச்சினைகளுக்கான ஒரு சிறந்த தீர்வு. பால் மற்றும் தேன் பேஸ்பேக். தேன் என்பது சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பழமையான ஆனால் மிகவும் சிறந்த ஒரு தீர்வாகும். கட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன் மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை. இது ஒரு ஈரப்பதத்தை தரும் பொருள் ஆகும்.

சருமத்திற்கு மென்மை மற்றும் மிருதுவான உணர்வைத் தருகிறது. இப்போது இந்த பேஸ் பேக் செய்யும் முறையை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
1/2 அல்லது 1/3 கப் பால்
3-4 ஸ்பூன் ஆர்கானிக் தேன்

செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலை சேர்த்துக் கொள்ளவும். அந்த பாலில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவை இரண்டும் சேர்ந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் ஆகும்வரை நன்றாக கலக்கவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். கன்னங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் கவனமாக இந்த பேஸ்டை தடவவும். கழுத்து முன் பகுதி மற்றும் பின் பகுதியிலும் இந்த பேஸ்டை ஒரே சீராக தடவவும்.

முழுவதும் இந்த பேஸ்டை தடவியவுடன் 10-15 நிமிடங்கள் அப்படியே காய விடவும். இந்த பேக் முழுவதும் காய்ந்தவுடன் ஒரு ஈரமான ஸ்பாஞ் கொண்டு முகத்தில் உள்ள பேக்கை துடைத்து எடுக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

குறிப்புகள்:
முகத்தை துடைத்தவுடன் மாயஷ்ச்சரைசெர் பயன்படுத்த வேண்டாம். பால் ஒரு இயற்கையான மாய்ச்சரைசெர் ஆகும்.
அடுத்த சில மணி நேரங்களுக்கு முகத்தை கழுவ சோப் பயன்படுத்த வேண்டாம். நாம் பயன்படுத்திய இயற்கை மூலப்பொருட்கள் முகத்தில் வேலை செய்யட்டும்.
கை மூட்டு பகுதி, பாதம், கால் முட்டி, முதுகு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
முகம் கழுவிய பின்னர், பஞ்சில் சிறிதளவு பன்னீர் ஊற்றி நனைத்து உங்கள் முகத்தில் ஒத்தி எடுக்கலாம்.
வேறு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். பன்னீர் மட்டுமே போதுமானது.

உதடு மற்றும் சரும வெடிப்பு:
கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, உதடுகளில் உண்டாகும் வெடிப்பு போன்றவற்றைப் போக்க இந்த மாஸ்க் உதவுகிறது. குளிர்காலங்களில் மற்றும் மழைக்காலங்களில் சருமம் வறண்டு, பாத வெடிப்பு, மற்றும் உதடு வெடிப்பு உண்டாகிறது . இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் எளிய முறையில் அந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

வயது முதிர்வு;
வயது முதிர்வை தடுப்பது இதன் மறைமுக நன்மை ஆகும். தொடர்ச்சியாக இந்த மாஸ்கை பயன்படுத்துவதால், இளம் வயதிலேயே முகத்தில் உண்டாகும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சருமத்தை இறுக்கமாக வைத்து இத்தகைய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.