தேயிலைக்கான தடையை நீக்கிக் கொள்ள பொருத்தமான இராஜதந்திர பதில்களை வழங்க அமைச்சரவை அனுமதி..

ரஷ்யாவினால் இலங்கைத் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிக் கொள்வதற்காக பொருத்தமான இராஜதந்திர பதில்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ரஷ்ய கூட்டரசாங்கத்தின் மூலம் இலங்கை தேயிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேயிலையில் காணப்பட்டதாக கூறப்படும் வண்டு இனம் இலங்கையில் அறிதாக காணக்கூடிய ஒன்று எனவும், அது ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் கலந்திருந்தமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் குறித்த தடையினை நீக்கிக் கொள்வதற்காக பொருத்தமான ஏனைய இராஜதந்திர பதில்களை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.