தேயிலையின் தரத்தைப் பரிசோதிப்பதற்கு புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் தீர்மானித்துள்ளது.
குறித்த இயந்திரத்தின் மூலம் தேயிலையின் சரியான இரசாயன சேர்மானம் தொடர்பிலான அளவீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு உதவுவதாக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் சரன் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த இயந்திரத்தின் மூலம் சர்வதேசத்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிக்க முடியும் எனவும் தேயிலை உற்பத்தியில் அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.