தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடை – ரஷ்யா பயணமாகிறது உயர் மட்டக் குழு..

இலங்கை இலிருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதையடுத்த, குறித்த இந்தப் பிரச்சினை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உயர் மட்டக் குழுவொன்றை, மொஸ்கோவுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருந்தோட்டைத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்கவும், அடுத்தவாரம் ரஷ்யாவுக்குப் பயணமாகவுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

#reeshma..