தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் புதிய திட்டம்

தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தேயிலை சபையின் ஏற்றுமதிக்கான பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க வர்த்தகர்களுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது தேயிலைக்கான கேள்வி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தமக்கு கிடைக்கும் சில கேள்விகளையும் நழுவ விடுவதற்கான காரணம் என்ன? என இதன்போது வர்த்தகர் நிதி ஒருவர் வினா எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தேயிலை சபையின் ஏற்றுமதிக்கான பிரதி ஆணையாளர் “இது குறித்து பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், இதை நிவர்த்தி செய்வதற்காகவே 24 மணி நேரமும் தேயிலை சபை இயங்கக்கூடிய புதிய முறையினை நடைமுறைப்படுத்த உள்ளது” என்றார்.

மேலும் இதன்மூலம் அசௌகரியங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.