உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போகலாம் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் டிசம்பர் மாதம் 12ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையில், 9ம் திகதி அரசப் பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
இதற்கான கோரிக்கையை பரீட்சைகள் ஆணையாளர் தம்மிடம் விடுத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த மாற்றுதினம் இல்லை என்பதால், அடுத்த வருடம் ஜனவரி வரையில் தேர்தலை பிற்போட நேரும் என்றும் அவர் குறுறிப்பிட்டுள்ளார்.
(rizmira)