தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் எடுப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தேர்தல் முடியும் வரை குறித்த தீர்மானத்தை ஒத்தி வைப்பதாக கட்சி தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
#rishma..