தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியை வெற்றி கொள்ளச் செய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றி கொள்ளச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சகல கட்சி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சகலரையும் குறித்த இக்கலந்துரையாடலுக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள், எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிப்பது அவர்களது கடமை எனவும் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)