தேர்தலில் மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி – பவித்ரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி இதனை தனது முகப்புத்தகத்தில் (Facebook) குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.

அந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

மிரிஹனவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுமாறு கோரினேன்.

இந்தக் கோரிக்கையை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.

நாளை நடைபெறவுள்ள இரத்தினபுரி மாவட்டக் கூட்டத்தில் இது குறித்த யோசனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன் என பவித்ரா வன்னியாரச்சி நேற்று முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் மஹிந்த எந்த மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)