எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்து மூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பது அவசியமாகும்.
தொழிலில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல் செயலகம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கை (சுற்றுநிருபம்)

(rishma)