தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை…

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அவசியமாகும். விடுமுறையின் கால எல்லை, சேவை தளத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல் செயலகம் சுற்றுநிரூபனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள தேர்தலின் போது தொழில் புரியும் ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக தமக்குரிய உரிமை மீறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கெடுப்பின் போது வாக்களிக்க உரிமையுள்ள தமது ஊழியர்களுக்கு சட்டத்தின் கீழ் உரிமையுள்ள விடுமுறையை தனியார் மற்றும் அரசாங்க தொழிற்துறையிலுள்ள ஊழியருக்கு வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.