தேர்தலுக்கு முன் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டு உடன்படிக்கை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்பு, ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு(28) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே மேற்குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த இந்தச் சந்திப்பில், ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

பேச்சுவார்த்தையை முன்னோக்கி நடத்த வேண்டுமாயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

 

####