எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையின் கீழே நடத்த வேண்டும் என பல சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் பழைய முறைமையின் கீழே நடத்த ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று(25) நடைபெற்றது.
வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 05 மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாயின் எதிர்வரும் டிசம்பரில் தேர்தல் நடத்த முடியும் எனவும், இதில் கருத்து தெரிவிக்கும் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
R.Rishma