எதிர்வரும் தேர்தல்களில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் இரட்டைக் குடியுரிமையினை இரத்து செய்வது குறித்து வினவிய போது, தான் தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என்பதால் எனது இரட்டைக் குடியுரிமையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.