(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தல் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இன்று(19) இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
அதன்படி குறித்த சின்னம் தொடர்பில் கலந்துரையாட இன்று தேர்தல் ஆணைக்குழுவில் பிற்பகல் 1.30 மணியளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதோடு, இதன்போது அன்னம் சின்னத்தில் போட்டியிட முடியுமா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.