தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (20) வருகை தரவுள்ளதுடன், நாளை செவ்வாய்க்கிழமை (21)முதல் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம்,பொதுநலவாய நாடுகளின்  சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 110 பேர்வரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

(riz)