மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் வலுப்பெற்றுள்ள நிலையில், தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்போது, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கவுள்ளார்.
அரசு, தேர்தலை பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்த முடியாத சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma