உள்ளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று(07) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.