தேர்தல் பிற்போடுவதனை என்னால் தடுக்க முடியாது..- மஹிந்த…

தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளாது.

உள்ளூராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(22) இடைக்கால தடை உ த்தரவைப் பிறப்பித்திருந்த நிலையில் நேற்று(22) இது குறித்து குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில்;

“…எதிர்வரும் 25ம் திகதி கூடும் கூட்டத்தில் தேர்தல் குறித்து எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய செயற்படவுள்ளதாகவும், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தனக்கு செய்வதற்கு எதுவும் இல்லை”.. எனவும் அவர் கூறியிருந்தார்.

 

#reeshmaa