தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க SMS சேவை…

தேர்தல் முறைப்பாடுகளை இன்று முதல் தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் படிமுறைகளின் ஊடாக தேர்தல் முறைப்பாடுகளை குறுந் தகவல்களாக அனுப்பி வைக்க முடியும்.

ECEV குறித்த மாவட்டம் உங்கள் முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

மேலும், வட்ஸ்அப் (0776 645 692) மற்றும் வைபர் (0712 550 780) ஊடாகவும் உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை புகைப்படங்களாகவோ காணொளிகளாகவோ தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கலாம்.