தேவதை போன்று வந்த மகள்: முத்தம் கொடுத்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தாவின் ரேம்ப் வாக்கை கண்டு பூரித்து போயுள்ளனர்.

மும்பையில் ஆடை வடிமைப்பாளர்களுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதில், Abu Jani-Sandeep Khosla வடிவமைத்த ஆடையை ஸ்வதே பச்சன் அணிந்துகொண்டு பங்குபெற்றார்.

பிரமாண்டமான வெள்ளை கவுன், தலையில் க்ரீடம் என தேவதை உடையில் ரேம்ப் வாக் செய்தார்.

Screenshot_22

இந்த நிகழ்வில் பச்சன் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். தனது மகளின் ரேம்ப் வாக்கை கண்டு அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் ஆகிய இருவரும் கைதட்டி ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர்.

மேலும், மேடையில் வைத்தே தனது மகளுக்கு அமிதாப் பச்சன் முத்தம் கொடுத்து தனது சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ” உலகின் மிக அழகான மகள்” என தன் மகளின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, தந்தையாக மிகவும் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.