(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று(14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கொள்கை பிரகடனங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முழுமையான கொள்ளை பிரகடனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.