தைப்பொங்கல் ஊடாக மானிட சமூகத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றது – ஜனாதிபதி

மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் தைப்பொங்கல் பண்டிகை ஊடாக மானிட சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் சூரிய வழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் பண்டிகை உள்ளது.

புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத் திருநாள் மேலும் மெருகூட்டுவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.