தைவான் நாட்டில் இன்று(07) ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 200-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஹொட்டல் உட்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.