திக்ஓவிட்ட, புளத்கொஹுபிட்டிய பிரதேசங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இரத்தினபுரி, தேல, மல்வல பிரதேசங்கள், எலபான, பெல்மதுல்ல, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, இம்புல்பே போன்ற பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் குறித்த அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றை அண்மித்து பள்ளமாக பகுதிகளில் வசிக்கும் மக்கள், வௌ்ளம் ஏற்படுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.