தொடரும் பாலியல் வன்புணர்வுகளும் விடிவைத்தேடும் இளசுகளும்

ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய முதியவரொருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி – மூன்றாம் குறிச்சி – தக்வா நகரில் வசித்து வரும் குறித்த சிறுமி, தனது அயல் வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேலையே, சந்தேகநபர் சிறுமியை பயமுறுத்தி வீட்டின் கதவுகளை மூடி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சிறுமி அழுது சத்தமிட அழுகைக்கு கைமாறாக நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து யாரிடமும் நடந்த விடயத்தினை சொல்ல வேண்டாமென கூறி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

சிறுமி அழுது கொண்டு ஓடி வந்து நடந்த விடயத்தினை தனது தாயிடம் கூற தாய் அயலவர்களை அழைத்து விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதையறிந்த சந்தேகநபர் வீட்டை மூடி விட்டு பின் கதவினால் ஓடிச் சென்று பாழடைந்த வீடொன்றுக்குள் ஒளிந்த நிலையில் அயலவர்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தெடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.