நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நேற்று(03) நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிராத்வைட் 2 விக்கெட்டுகளும், டெய்லரும், எமிட்டும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியில் பிளெட்சரை தவிர மற்ற யாரும் நிலைத்து விளையாடவில்லை.
நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்துவீச்சில் மேற்கிந்திய தீவு வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிச்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
#reeshma