தொடர்ந்தும் நீடிப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில், மக்கள் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.