(FASTNEWS|COLOMBO) பெரும்பாலான மாவட்டங்களில் நாளை(02) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
வெப்பமான காலநிலை நிலவும் சந்தரப்பங்களில் அதிக நீர் பருகுமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, 24 மணித்தியாலங்களில் குருநாகலில் 38.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், வவுனியாவில் 38.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் 37.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.