தொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

தொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அடுத்த சில நாட்களிலேயே அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.

காலை உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல், போதிய சத்து இல்லாத காலை உணவைச் சாப்பிடுவது போன்ற செயல்களால், அப்போதே உடம்பின் சக்தி குறையும். அதற்கு அடுத்தபடியான வேளைகளில் சத்தான உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட அவற்றின் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்காது. இதை improper metabolism என்போம். இதனால் மூட்டுவலி, இரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிக அளவில் வரும். இதுபோன்ற காரணங்களால்தான், 35 வயது தாண்டியதுமே பலரும் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அந்த நிலை தொடரும்போது, உடலுக்குள்ளேயே இருக்கும் பழைய சத்துகளைப் பயன்படுத்தி உடலின் அடுத்தடுத்த எதிர்வினை நடக்கும். இது நெகட்டிவ் எனர்ஜி பேலன்ஸ் எனப்படும். இது மிகவும் அதிகமானால் மயக்கம், சோர்வு, குறை இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பருமனாக இருப்பவர்கள், சாப்பிடுவதை கைவிட்டாலே காலையில் எடை குறையும் என நினைப்பார்கள். அது உண்மையல்ல.
பசிக்கு ஏற்ப சாப்பிட்டு, அவற்றைக் கரைக்கும் அளவுக்கு வேலை செய்தாலே தேவையற்ற பருமன் ஏற்படாது. காலை உணவைத் தவிர்க்கும் மாணவர்களுக்கு கவனச்சிதறல், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பிரதான வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இரவுப்பணிக்குச் செல்பவர் களில் பலர் காலையில் வீடு திரும்பியதும் உடனே படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனாலும் உடலின் எனர்ஜி லெவல் குறையும். உடல்நலம் பாதிக்கப்படும். இவர்களைப் பொறுத்தவரை காலை உணவே இரவு சாப்பாடு.
அனைத்து உணவுப் பழக்கவழக்கங்களையும் இவர்களும் தவறாமல் செய்ய வேண்டும். ஒரே வித்தியாசம், பகல்-இரவு மாறுபாடு மட்டுமே!

கவனக்குறைவாக பணிபுரிதல் (skimping):
முழுமையாகச் சாப்பிடாமல் அரைகுறையாகச் சாப்பிடுவதால் முழுமையான சத்துகள் கிடைக்காத நிலை. அதனால்தான் காலை உணவிலேயே தேவையான சத்துகள் கிடைக்கும் வகையில் நல்ல உணவு சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறது.