தொடர் பழிவாங்கலினால் லசித் மாலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா.. ?

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபத்துக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படாமை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் நேற்றுமுன்தினம் தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன்படி இக்குழாமில் லசித் மாலிங்கவின் பெயர் இடம்பெறமை ரசிகர்களுக்கும் மலிங்கவுக்கும் சோகத்தை அளித்துள்ளது.

இந் நிலையில் லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து தொடர்ந்தும் ஓரம் கட்டப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. லசித் மலிங்க தனக்கு உடற் தகுதி இருக்கின்றது என்பதையும் நிரூபித்து விட்டார். தான் இன்னும் திறமையோடுதான் பந்து வீசுகின்றேன் என்று உள்ளூர் போட்டிகளிலும் ஆடிக் காட்டி விட்டார்.

என்றாலும் மலிங்கவுக்கான‍ இடம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றமை ஏன் என்று தெரியவில்லை.