தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொட்டலங்க பகுதியில் நேற்று மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று காலையும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. விக்டோரியா பாலத்துக்கு அருகில் வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. அத்துடன் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வத்தளை , ஹேகித மற்றும் அலகந்த பக்கம் ஊடக கொழும்புக்கு பயனுக்குமாறு போலீசார் வேண்டி உள்ளனர்
இதட்கிடையில் தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து பாதிக்க பட்ட பொதுமக்கள் ஆர்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை கொழும்பு வடக்கு DIG அஜித் ரோகண மேற்கொண்டு பாதை தடைகளை 12 மணி வரை தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுத்து உள்ளார்