தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியின்றி கட்டப்படுவதாக கூறப்படும் கட்டடங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியிலுள்ள ஜப்பான் – இலங்கை நட்புறவு பாலத்தை மறித்து நேற்று மாலை, பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை வரை தொடர்ந்த அந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியிளான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
எனினும் இன்று காலை முதல், குறித்த பாலத்திலான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
இந்நிலையில் பேராட்டக்காரர்கள் சுமார் 10 பேர் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதி குறித்தும் அதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரியும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இன்று காலை வடக்கு கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறித்த பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.