தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக வங்கியினால் வழங்கப்பட்டு வந்த உதவி அதிகரிப்பு..

நாட்டில் ஏற்படும் தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக வங்கியினால் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையிலான சந்திப்பொன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலமாக, நாட்டில் தொற்றா நோயை கட்டுப்படுத்தும் வகையில் உலக வங்கியினால் இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த தொகையை 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்வரை உயர்த்த உலக வங்கி பிரதிநிதிகள் ஒப்புதல் வழங்கியதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.