தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்..

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உடல் நலக் குறைவின் காரணமாக அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமோ அல்லது அரசாங்கமோ பதவி விலகல் குறித்து அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.