தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சில் தரவு நிலையம்…

தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தரவு நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

குறித்த தரவு நிலையம் 250 கோடி ரூபா செலவில் ஹோமாகம பிட்டிப்பன நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண விழாவில் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர் ரவிசங்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்மூலம் தரவுகளை நம்பகமாக சேமித்து வைத்து, கிளவுட் கம்பியூட்டிங் சேவைகளை வழங்க முடியும்.