தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இவர்கள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலத்தில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலும் குறித்த அதிகாரிகள் விசாரணைக்காக கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோப் குழுவின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையானது அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.