தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS | COLOMBO) – ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சினால் அழுத்தம் கொடுப்பதாகவும், அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரி இன்று(03) நள்ளிரவு 12.00 முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சரினால் ரயில்வே பொது முகாமையாளருக்கு அரச நடடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.